Psychosocial Support Volunteer Service

Directions

Psychosocial Support Volunteer Service Mrs.T.Francis
BSc(Psy & Coun)
Leader of the Shelter & Executive Director
IIPMS-SRI LANKA

கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் பங்கேற்பில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய மட்ட நியமனங்கள் வழங்கி வைப்பு!மட்டக்க...
25/10/2026

கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் பங்கேற்பில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய மட்ட நியமனங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு, ஒக்டோபர் 25

மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் 26 ஆண்டுகால சேவையின் மைல்கல் நிகழ்வாக, தேசிய மட்டத்திலான பல்வேறு பொறுப்புகளுக்கான நியமனங்களும் தொண்டர்களுக்கான நியமனங்களும் இன்று (25) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கௌரவ உமர் கதாப் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, தேசிய மட்ட நியமனங்களை வழங்கி வைத்தார்.

சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு மையத்தின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், மட்டக்களப்பிலுள்ள உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய இணைப்பாளர், தேசிய உளசமூக சேவை ஒருங்கிணைப்பாளர், தேசிய சமூக நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர், தேசிய சமூக விழிப்புணர்வு மற்றும் தொண்டர் ஒருங்கிணைப்பாளர்,, தேசிய தொண்டர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், தொண்டர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறப்பு அதிதிகளாக MIU பல்கலைக்கழகத்தின் கல்விக்கான இலங்கைப் பொறுப்பாளர் தேசபந்து கௌரவ கலாநிதி ABM. மர்வான், பல்கலைக்கழகத்தின் சமய, சமூக மற்றும் கலாசார செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பிரதிநிதி தேசபந்து கௌரவ கலாநிதி பாஹிர், உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் E. கங்காதரன், டெஸ்மியோ நிறுவனத்தின் பணிப்பாளர் T. சிற்றம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதி உரை

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கௌரவ உமர் கதாப் அப்துல்லா, உளசமூக ஆதரவு மையம் நீண்டகாலமாகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் மனமகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில் குடும்பமாக இணைந்து செயற்பட்டு வருவதைத் தாம் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இவ்வமைப்பின் சேவையை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்துவதற்குத் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், அமைப்பின் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உளவியல் ரீதியான பாதிப்புகளால் சிலர் தவறான முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் சமூகத்தில் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிலைமைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களை நேரில் பார்த்தும், அறிந்தும், கேட்டும் வருவது தமக்கு மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

தேசிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அவர், புதிதாக நியமனம் பெற்ற தேசிய இணைப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவர்கள் மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் உளசமூகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் மூலம் உளசமூக ஆதரவு சேவைகளை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கான புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் உளநல மேம்பாடு, சமூக நல்லிணக்கம், விழிப்புணர்வு மற்றும் தொண்டர் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் உளநலப் பாதுகாப்பில் விழிப்புடன் செயற்படுவோம்!“சிறுவர்களின் மாற்றங்களை கவனிப்போம்; அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்ப...
01/10/2026

சிறுவர் உளநலப் பாதுகாப்பில் விழிப்புடன் செயற்படுவோம்!

“சிறுவர்களின் மாற்றங்களை கவனிப்போம்; அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்” – உளசமூக ஆதரவு மையப் பணிப்பாளர்

சர்வதேச சிறுவர் தினத்தை (01.10.2026) முன்னிட்டு, சிறுவர்களின் உளநலத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்களும் சமூகத்தினரும் அதிக அக்கறையுடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என உளசமூக ஆதரவு மையத்தின் பணிப்பாளர் திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

எமது கண்களை எவ்வாறு அக்கறையுடன் பாதுகாத்துக் கொள்கின்றோமோ, அதேபோன்று ஒவ்வொரு சிறுவரின் உடல் நலத்துடன் அவர்களின் உளநலத்தையும் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உளவியல் தாக்கங்களின் வெளிப்பாடாக சில சிறுவர்களிடம் நடத்தையில் மாற்றங்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய மாற்றங்களை வெறுமனே ஒரு குறையாகப் பார்க்காமல், அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து பெற்றோர்களும் சமூகத்தினரும் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு சிறுவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றம், அவருக்குள் ஏதோ ஒன்று மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். எனவே, அவர்களின் செயல்களை மட்டும் கவனிப்பதை விட, அவர்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்” என திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர்கள் தங்களது அச்சங்கள், கவலைகள், சந்தேகங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்ளக்கூடிய பாதுகாப்பான குடும்ப மற்றும் சமூகச் சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நடத்தையில் தொடர்ச்சியான அல்லது கவலைக்கிடமான மாற்றங்கள் தென்படும் சந்தர்ப்பங்களில், அவர்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக உரிய பெரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, தேவையான உளசமூக ஆதரவு மற்றும் வழிகாட்டலைப் பெற்றுக்கொடுப்பது முக்கியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“சிறுவர்களைப் பாதுகாப்பது என்பது அவர்களின் உடல் நலத்தை மட்டும் பாதுகாப்பதல்ல; அவர்களின் உணர்வுகள், மனநிலை மற்றும் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாப்பதாகும்” எனக் குறிப்பிட்ட திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ், அனைத்து சிறார்களுக்கும் தனது இனிய சர்வதேச சிறுவர் தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

உளசமூக ஆதரவு மையம்
“உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.”

*🧠 உலக மனநல தினம் – 10.10.2026*❤️ மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு உதவுவோம்ஒக்டோ...
29/09/2026

*🧠 உலக மனநல தினம் – 10.10.2026*

❤️ மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு உதவுவோம்

ஒக்டோபர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக மனநல தினத்தை முன்னிட்டு, மனநலப் பிரச்சினைகளுக்காக வைத்திய சிகிச்சை மற்றும் பராமரிப்பைப் பெற்று வரும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவியளிக்க உளசமூக ஆதரவு மையம் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

இந்த உதவித் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

*🌿 எமது உதவியின் மூன்று முக்கிய நோக்கங்கள்*

🔹 01. அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதரவு
குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய உதவுதல்.

🔹 02. சிகிச்சை மற்றும் பராமரிப்பைத் தொடர்ந்து பெறுவதற்கு ஆதரவு
மனநலப் பிரச்சினைகளுக்காக வைத்திய சிகிச்சை மற்றும் பராமரிப்பைப் பெற்று வரும் நபர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவை வழங்குதல்.

🔹 03. குடும்பங்களுக்கான மனிதநேய ஆதரவை வலுப்படுத்துதல்
மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படாமல், அவர்களுக்கான சமூக மற்றும் மனிதநேய ஆதரவை வலுப்படுத்துதல்.

🤝 ஒரு குடும்பத்திற்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் – ஒரு குடும்பத்தின் சுமையை ஓரளவு குறைக்கும் மனிதநேய முயற்சி.

இந்தப் பணிக்கு தங்களால் இயன்ற நிதி உதவி அல்லது உலர் உணவுப் பொருள் உதவியை வழங்க விரும்பும் நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் எமது முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

❤️ உங்களின் சிறிய பங்களிப்பு, ஒரு குடும்பத்திற்கு பெரிய ஆதரவாக அமையலாம்.

🌿 “மனநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.”

உளசமூக ஆதரவு மையம்
சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் (IIPMS)
25/1, 4ஆம் குறுக்கு,
கல்லடி–வேலூர், மட்டக்களப்பு.

📞 *தொடர்புக்கு*
*077 554 1758 / 077 698 4338*

ஒரு சக்கர நாற்காலி… ஒரு வாழ்க்கைக்கு புதிய நகர்வுதேவையை அறிந்து உதவிக்கரம் நீட்டிய மனிதநேய உள்ளங்களுக்கு நன்றி!ஆரையம்பதி...
26/09/2026

ஒரு சக்கர நாற்காலி… ஒரு வாழ்க்கைக்கு புதிய நகர்வு

தேவையை அறிந்து உதவிக்கரம் நீட்டிய மனிதநேய உள்ளங்களுக்கு நன்றி!

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில், எமது உளசமூக ஆதரவு அமைப்பின் தன்னார்வத் தொண்டராக சேவையாற்றி வரும் திருமதி T. பிரதீபா அவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் ஒருவருக்கு சக்கர நாற்காலி தேவைப்படுவதை அடையாளம் கண்டு எமது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் எமது உளசமூக ஆதரவு தொண்டராக சேவையாற்றி வரும் திருமதி V. சாருலதா அவர்களின் ஒருங்கிணைப்புடன், தேவையான சக்கர நாற்காலியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த மனிதாபிமான உதவிக்கு Working Women Development Foundation (WWDF) அமைப்பின் இணைப்பாளர் திருமதி Selvarasa Sasiyanthini அவர்களின் ஆதரவும் ஒருங்கிணைப்பும் கிடைத்ததுடன், கனடாவில் வசிக்கும் ஓர் ஆதரவாளரின் உதவியுடன் புதிய சக்கர நாற்காலி எமக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சக்கர நாற்காலி பயனாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு உளசமூக ஆதரவு மையத்தின் தலைவி திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் வழிநடத்தலில், கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி ஆர். சியாமளா அவர்களின் தலைமையில், அனைவரினதும் அக்கறை, ஒத்துழைப்பு மற்றும் மனிதநேயப் பங்களிப்புடன் நடைபெற்றது.

நிகழ்வில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய இணைப்பாளர் தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும், Working Women Development Foundation (WWDF) அமைப்பின் இணைப்பாளர் திருமதி Selvarasa Sasiyanthini அவர்களும் கலந்து கொண்டு சக்கர நாற்காலியை வழங்கி வைத்தார்.

இந்த மனிதாபிமான உதவியை வழங்கிய Working Women Development Foundation (WWDF) அமைப்பிற்கும், அதன் இணைப்பாளர் திருமதி Selvarasa Sasiyanthini அவர்களுக்கும், கனடாவில் இருந்து ஆதரவு வழங்கிய அன்புள்ள நன்கொடையாளருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், களத்தில் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை எமது கவனத்திற்கு கொண்டு வந்து, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் எமது அனைத்து உளசமூக ஆதரவு தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஒருவரின் தேவையை அறிதல் – அக்கறை.
அந்தத் தேவைக்கு உதவிக்கரம் நீட்டுதல் – மனிதநேயம்.

உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.

உளசமூக ஆதரவு மையத்தின் உத்தியோகபூர்வ கடிதம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைப்புசவுதி அரேபியாவில் அனோஜன் தொடர்பாக ந...
26/09/2026

உளசமூக ஆதரவு மையத்தின் உத்தியோகபூர்வ கடிதம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைப்பு

சவுதி அரேபியாவில் அனோஜன் தொடர்பாக நிலவி வரும் சூழ்நிலையினால், அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிலைமையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.

மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில், அனோஜனின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை, கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக, 23.09.2026 அன்று எமது குழுவினர் அனோஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருடன் உளசமூக ஆதரவு மற்றும் ஆறுதல் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது, அனோஜனின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்களது தற்போதைய நிலைமை, கவலைகள், உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

குடும்பத்தினர் வெளிப்படுத்திய விடயங்களை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, 26.09.2026 அன்று இலங்கை ஜனாதிபதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு, மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் மூலம், குடும்பத்தினர் எதிர்கொள்ளும் கவலைகள், உணர்வுகள் மற்றும் மனிதநேய அடிப்படையிலான எதிர்பார்ப்புகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும், நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருமானால், அவற்றை உரிய முறையில் தொடர்ந்து முன்னெடுத்து, குடும்பத்தினருக்கு தேவையான தகவல், வழிகாட்டல் மற்றும் சாத்தியமான மனிதநேய உதவிகள் கிடைப்பதற்கு உரிய கவனம் செலுத்துமாறும் எமது கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் நோக்கம் எந்தவொரு சட்ட அல்லது இராஜதந்திர நடவடிக்கையிலும் தலையிடுவது அல்ல. மாறாக, கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் கவலைகள், உணர்வுகள் மற்றும் மனிதநேய அடிப்படையிலான எதிர்பார்ப்புகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வதே ஆகும்.

ஒரு குடும்பத்தின் கவலையை கேட்பது மட்டுமல்ல; அவர்களின் குரல் உரிய இடத்தை சென்றடையச் செய்வதும் மனிதநேயத்தின் ஒரு பகுதியாகும்.

උලසමුක සහාය මධ්‍යයේ උද්‍යෝගපූර්ව ලිපිය – ජනාධිපතිවරයාගේ අවධානයට යොමු කිරීම

සෞදි අරාබියාවේ අනෝජන් සම්බන්ධයෙන් පවතිනු ඇත තත්වයෙන්, ඔහුගේ තායාර් ඇතුළු පවුලේ අය මුහුණ දෙන තත්වය ජනාධිපතිවරයාගේ අවධානයට යොමු විය.

මට්ටක්ලප්පු උලසමුක සහය මධ්‍යයේ සංවිධානය, අනෝජනින් පවුලේ අය මුහුණ දෙන වත්මන් තත්ත්වය, කනස්සල්ල සහ අපේක්ෂාවන් සෘජුවම දැන ගැනීම සඳහා, 23.09.2026 එදින අපගේ කණ්ඩායම අනෝජනීන්ගේ නිවසට ගොස් පවුලේ සාමාජිකයන් සමඟ උලසමුක සහාය සහ සැනසීම සාකච්ඡාවක් සිදු කළහ.

මේ අතර, අනෝජනින් තායාර් ඇතුළු පවුලේ අය ඔවුන්ගේ වර්තමාන තත්ත්වය, කනස්සල්ල, හැඟීම් සහ අපේක්ෂාවන් ඔවුන් සමඟ බෙදා ගත්හ.

2026.09.25 දින ශ්‍රී ලංකා ජනාධිපති මෛත්‍රී අනුර කුමාර තිසානායක මැතිතුමාගේ අවධානයට, මට්ටක්කාලප්පු උලසමුක සහය මධ්‍යස්ථානයේ නියෝජිතායතනය වෙනුවෙන් වෘත්තීය පූර්ව ලිපියක් යවා ඇත.

අදාළ ලිපිය හරහා, පවුලේ අයට මුහුණ දෙන කනස්සල්ල, හැඟීම් සහ මානව හිමිකම් අපේක්ෂාවන් ජනාධිපතිවරයාගේ අවධානයට ගොස් ඇත.

තවද, ප්‍රායෝගිකව පවතින නීති සහ ඉරාජතන්ත්‍ර ක්‍රියාමාර්ගවලට අදාළ නිලධාරීන් සහ ආයතන සඳහා අවශ්‍ය වේ ක්‍රියාකාරකම් සිදු කරන ලද ආදායම, අවශ්‍ය ක්‍රමයෙන් ඉදිරියට ගෙන යාම, පවුලේ අයට අවශ්‍ය තොරතුරු, මඟ පෙන්වීම සහ හැකි මිනිසාගේ උපකාරය ලැබීමට නිසි අවධානය යොමු කිරීම අපගේ ලිපියෙන් ඉල්ලා ඇත.

ඉන්නඩවඩක්‍යේ අරමුණ ඕනෑම නීතියක් හෝ ඉරාජතන්ත්‍ර ක්‍රියාමාර්ගය තුළ හිස තැබීම නොවේ. ඊට හාත්පසින්ම වෙනස්ව, දුෂ්කර තත්වයකට මුහුණ දෙන එක් පවුලක කනස්සල්ල, හැඟීම් සහ මනුෂ්‍යත්වයේ මූලික අපේක්ෂාවන් සඳහා සුදුසු දර්ශන අවධානයට ගෙන යන්න.

එක් පවුලක කරදරය ඇසීම පමණක්; කටහඬට අදාළ ස්ථානයට ගියදායච් කිරීම මානවනෙය් එක් කොටසක්.

அனோஜன் குடும்பத்தினருக்கு உளசமூக ஆதரவுசவுதி அரேபியாவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை – ஜனாதிபதியின்...
23/09/2026

அனோஜன் குடும்பத்தினருக்கு உளசமூக ஆதரவு

சவுதி அரேபியாவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை – ஜனாதிபதியின் தலையீட்டில் நம்பிக்கை

மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில், சவுதி அரேபியாவில் அனோஜன் தொடர்பாக தற்போது நிலவி வரும் சூழ்நிலையால் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிலைமையை அறிந்து, அவர்களுக்கு தேவையான உளசமூக ஆதரவை வழங்கும் நோக்கில், 23.09.2026 அன்று அனோஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உளசமூக ஆதரவு மையத்தின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உளசமூக ஆதரவு தொண்டர்கள், கிழக்கு மாகாணத்திற்கான உளசமூக ஆதரவு இணைப்பாளர் ஆர். சியாமளா மற்றும் தேசிய இணைப்பாளர் தேசப்பந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திப்பின்போது, அனோஜன் தொடர்பாக சவுதி அரேபியாவில் நிலவி வரும் சூழ்நிலை மற்றும் அதனால் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் கவலைகள், உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக உளசமூக ஆதரவு மையத்தின் தலைவி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்தார்.

இதன்போது, குடும்பத்தினரும் தங்களுடைய தற்போதைய நிலைமை, உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி அவர்களின் தலையீடு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்ததாக தேவரஞ்சினி பிரான்சிஸ் கூறினார்.

குடும்பத்தினருடனான கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமையை உரிய முறையில் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த கடிதம், குடும்பத்தினரின் உணர்வுகள் மற்றும் தற்போதைய நிலைமையை மனிதநேய அடிப்படையில் உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்திலேயே தயாரிக்கப்படவுள்ளதாக தேவரஞ்சினி பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

அதேவேளை, எந்தவொரு சட்ட அல்லது இராஜதந்திர நடவடிக்கையிலும் தலையிடாமல், குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் உணர்வுகளை மதித்து, அவர்களுக்கு தேவையான செவிமடுத்தல், உளசமூக ஆதரவு மற்றும் மனிதநேயத் துணையை வழங்குவதே மையத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் குரலை செவிமடுத்து, அவர்களின் உணர்வுகளுக்கு மனிதநேய அடிப்படையில் இடமளிக்கும் வகையில் இச்சந்திப்பு அமைந்ததாகவும் தேவரஞ்சினி பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.

உளசமூக ஆதரவு மையம் (PSSS)சமூக விழிப்புணர்வு அறிக்கைமட்டக்களப்பில் தொடரும் தற்கொலைச் சம்பவங்கள்.நாம் சிந்திக்க வேண்டிய நே...
22/09/2026

உளசமூக ஆதரவு மையம் (PSSS)

சமூக விழிப்புணர்வு அறிக்கை

மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைச் சம்பவங்கள்.

நாம் சிந்திக்க வேண்டிய நேரம்!

ஒரு தற்கொலைச் சம்பவம் பற்றிய செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

சில நேரங்களில் நாம் உடனடியாக காரணத்தைத் தேடுகிறோம். ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி:

“அந்த மனிதர் இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு, யாராவது அவருடன் உண்மையாகப் பேசியிருக்கிறார்களா?”

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, மாணவர்கள், பணியிடங்களில் இருப்பவர்கள், திருமணமானவர்கள், குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் என பல்வேறு சமூகப் பின்னணியிலுள்ளவர்கள் வாழ்க்கையின் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

சிலருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

சிலர் குடும்பப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.

சிலர் காதல் அல்லது உறவுச் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

சிலர் பிரிவு, ஏமாற்றம் அல்லது இழப்பை எதிர்கொள்ளலாம்.

மாணவர்கள் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.

பெரியவர்கள் பொருளாதாரச் சுமைகள் அல்லது பணியிட அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.

தனிமை, சமூக அழுத்தம், அவமான உணர்வு அல்லது தங்களுடைய மனவேதனையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை போன்றவையும் ஒருவரின் மனநிலையைப் பாதிக்கக்கூடும்.

தற்கொலைக்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும், அனுபவமும், மனநிலையும் வேறுபட்டவை.

ஒருவர் வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஒரு பெரிய போராட்டத்தை எதிர்கொண்டிருக்கலாம்.

அவருடைய மௌனத்தை நாம் கவனித்தோமா?

அவர் பேச முயன்றபோது நாம் கேட்டோமா?

அவருடைய மனவேதனையை “சிறிய விஷயம்” என்று நாம் அலட்சியப்படுத்திவிட்டோமா?

அவர் உதவி தேவைப்பட்டபோது, அவருக்கு அருகில் நாம் இருந்தோமா?

செப்டம்பர் 10 – உலக தற்கொலைத் தடுப்பு தினம்

தற்கொலைத் தடுப்பு என்பது ஒரு நாளில் மட்டும் நினைவுகூர வேண்டிய விடயம் அல்ல.

ஒவ்வொரு நாளும் மனித உயிரின் மதிப்பை உணர்ந்து, மனவேதனையில் இருப்பவர்களுடன் பேசுவதும், அவர்களைக் கேட்பதும், தேவையான உதவியைப் பெறுவதற்கு அவர்களை வழிநடத்துவதும் நம் அனைவரின் சமூகப் பொறுப்பாகும்.

அக்டோபர் 10 – உலக மனநல தினம்

மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்போம்.

மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களைத் தனிமைப்படுத்தாமல், அவர்களைப் புரிந்துகொள்வோம்.

மனநலப் பிரச்சினை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று அல்ல.

உதவி கேட்பது பலவீனம் அல்ல.

ஒருவரின் மனவேதனையை அக்கறையுடன் கேட்பது மனிதநேயம்.

நாம் என்ன செய்யலாம்?

ஒருவரின் மௌனத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.

ஒருவரின் காதல் அல்லது குடும்பப் பிரச்சினையை கேலி செய்யாதீர்கள்.

ஒருவரின் மனவேதனையைச் சிறுமைப்படுத்தாதீர்கள்.

அதற்கு பதிலாக அவரிடம்:

“நான் உங்களுடன் பேசத் தயாராக இருக்கிறேன்.”

“உங்களை நான் கேட்கிறேன்.”

“தேவைப்பட்டால் உதவியைப் பெற நாம் ஒன்றாகச் செல்லலாம்.”

என்று சொல்லிப் பாருங்கள்.

சில நேரங்களில் ஒரு அன்பான வார்த்தை, ஒரு கவனமான கேட்பு, ஒரு சரியான வழிகாட்டல், ஒருவரை உதவியை நாடுவதற்கான முதல் படியாக அமையலாம்.

“ஒரு வார்த்தை பேசுங்கள்… ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்.”

“மாணவன் மௌனமாக இருக்கும்போது… நாம் எங்கே இருந்தோம்?”

இந்த விழிப்புணர்வு அறிக்கையைப் பகிருங்கள்

இந்தச் செய்தி ஒருவரை சென்றடையலாம்.

ஒரு மாணவரை…

ஒரு பெற்றோரை…

ஒரு ஆசிரியரை…

ஒரு அலுவலகப் பணியாளரை…

ஒரு கணவன் அல்லது மனைவியை…

காதல் அல்லது உறவுச் சிக்கலில் இருக்கும் ஒருவரை…

அல்லது மனதில் சொல்ல முடியாத வலியைச் சுமந்து கொண்டிருக்கும் ஒருவரை…

உங்களால் முடிந்தவரை இந்த விழிப்புணர்வு அறிக்கையை ஏனையவர்களும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு பகிர்வு ஒரு உரையாடலுக்கான தொடக்கமாக இருக்கலாம்.

ஒரு உரையாடல் ஒருவர் உதவியை நாடுவதற்கான வாய்ப்பாக இருக்கலாம்.

வாழ்க்கையைப் பற்றி பேசுவோம்.
மனநலத்தைப் பற்றி பேசுவோம்.
ஒருவரை ஒருவர் கவனிப்போம்.
மனித உயிர்களை மதிப்போம்.

உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.

உளசமூக ஆதரவு மையம் (PSSS)
கேட்போம் • புரிந்துகொள்வோம் • வழிகாட்டுவோம்

📍 25/1, 4th Cross, Kallady Velloor, Batticaloa
📞 077 554 1758 | 077 698 4338

தேவரஞ்சினி பிரான்சிஸ்
தலைவி & நிர்வாகப் பணிப்பாளர்
உளசமூக ஆதரவு மையம் (PSSS)

முதலுதவியுடன் உளவியல் வலுவூட்டலும் அவசியம் – மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிதேசபந்து கௌரவ கலாநிதி S. ...
19/09/2026

முதலுதவியுடன் உளவியல் வலுவூட்டலும் அவசியம் – மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி

தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ்

முதலுதவி பயிற்சியுடன் மாணவர்களின் உளவியல் வலிமை, தன்னம்பிக்கை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுவாகச் செயற்படும் ஆற்றல் ஆகியவற்றை வளர்ப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுவது அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் கல்விக்கான சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக ஆதரவு வலுவூட்டல் வளவாளரும், உளசமூக ஆதரவு மையத்தின் இலங்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளரும், இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் தெரிவித்தார்.

மாணவர்கள் அவசரநிலைகளில் முதலுதவி வழங்குவதற்கான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் பெற்றுக்கொள்வதுடன், தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தன்னம்பிக்கையுடன் கையாளும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் கூறினார்.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்காக சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் முதலுதவி வதிவிடப் பயிற்சி கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு இன்று (19.09.2026) மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் கேடட் லெப்டினன் Mr. S. Stephan அவர்களின் தலைமையில், கேடட் லெப்டினன் Dr. Saba Sundararajah JP, Adult Secretary மற்றும் முன்னாள் மாவட்ட ஆணையாளர் அவர்களின் நெறிப்படுத்தலில் இப்பயிற்சி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சிறப்பு உளவியல் வலுவூட்டல் அமர்வை முன்னெடுத்தார்.

“பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது?” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்வமர்வில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காணுதல், அவற்றை பதற்றமின்றி அணுகுதல், உரிய தீர்வுகளைத் தெரிவு செய்தல், மன அழுத்தமான சூழ்நிலைகளில் தம்மை வலுப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் சவால்களில் இருந்து ஆக்கபூர்வமாக மீண்டு வருதல் தொடர்பான உளவியல் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

முதலுதவி என்பது உடலில் ஏற்படும் அவசரநிலைகளைக் கையாள்வதற்கான அறிவை மட்டும் வழங்குவதல்ல. அவசரமான சூழ்நிலையில் பதற்றமின்றி சிந்தித்து, நிலைமையைப் புரிந்துகொண்டு, பொறுப்புடன் செயற்படும் மனப்பக்குவத்தையும் வளர்ப்பதாகும் என கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அவர்களின் வயதுக்கும் புரிதல் மட்டத்திற்கும் ஏற்ற வகையில் உளவியல் ரீதியான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. கல்வி நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சவால்களைச் சரியான முறையில் கையாள்வதன் மூலம் கற்றலில் கவனம் செலுத்துவதையும் கல்வித் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மாணவர்களின் தன்னம்பிக்கை, குழு ஒத்துழைப்பு, தொடர்பாடல் திறன், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

இச்செயற்பாடுகளில் சிறப்பாகப் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், உளசமூக ஆதரவு தொண்டர் திருமதி R. சியாமளா அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிறிய பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

முதலுதவி அறிவுடன் உளவியல் வலுவூட்டலையும் இணைத்துப் பயிற்சி வழங்குவது, மாணவர்கள் அவசரநிலைகளையும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் அமைதியாகவும் பொறுப்புடனும் கையாள்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் என கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. S. சாந்தகுமார், சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவர்களுக்கான பொறுப்பாசிரியர் திருமதி ரேகா கஜேந்திரன், உப பிரிவு அதிகாரி திரு. செந்தீபன், உளசமூக ஆதரவு தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிதாக அடையாளம் காணப்படும் உளநலத் தேவையுடையோரை மருத்துவ சேவையுடன் இணைக்கும் உளசமூக ஆதரவு நடவடிக்கைமட்டக்களப்பு சுகாதார ...
17/09/2026

புதிதாக அடையாளம் காணப்படும் உளநலத் தேவையுடையோரை மருத்துவ சேவையுடன் இணைக்கும் உளசமூக ஆதரவு நடவடிக்கை

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு வரும் உளசமூக ஆதரவு சேவையாளர்களால், உளநல மருத்துவ மதிப்பீடு அல்லது சிகிச்சை தேவைப்படக்கூடிய சில புதிய நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை உரிய மருத்துவ சேவையுடன் இணைக்கும் நோக்கில், 16.09.2026 அன்று உளசமூக ஆதரவு நிழல் அமைப்பின் தலைவி F. தேவரஞ்சினி அவர்களின் தலைமையில் வீட்டு தரிசிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வீட்டு தரிசிப்பின்போது, அடையாளம் காணப்பட்ட நபர்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், மருத்துவ மதிப்பீடும் சிகிச்சையும் தேவைப்படுவோருக்கு உரிய வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவ சேவையுடன் இணைப்பதுடன் நடவடிக்கை நிறைவடைவதில்லை

உளசமூக ஆதரவு சேவையின் நோக்கம் ஒருவரை அடையாளம் காண்பதில் மட்டும் மட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவையுடையோரை உரிய மருத்துவ மற்றும் சமூக சேவைகளுடன் இணைத்தல், தேவையான உளசமூக ஆதரவை வழங்குதல், தொடர்ந்து பின்தொடர்தல் மற்றும் தொடர்புடைய சேவைகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவையும் இச்சேவையின் முக்கிய நோக்கங்களாகும்.

அதன்படி, புதிதாக அடையாளம் காணப்பட்டு மருத்துவ சேவையுடன் இணைக்கப்படும் நபர்கள் தொடர்பான தேவையான தகவல்கள், தனிநபர் ரகசியத்தன்மையைப் பாதுகாத்து, ஒவ்வொரு மாத இறுதியிலும் மாவட்ட உளநல வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இதன் மூலம், அவர்கள் தொடர்ந்து உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் பின்தொடர்தல் சேவைகளைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பதை அறிந்து, தேவையான சந்தர்ப்பங்களில் உரிய சுகாதார மற்றும் உளசமூக சேவைகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சமூக மட்டத்தில் தொடர்ச்சியான உளநலப் பாதுகாப்பு

அடையாளம் காணுதல் → மருத்துவ சேவையுடன் இணைத்தல் → மருத்துவப் பின்தொடர்தலை ஒருங்கிணைத்தல் → உளசமூக ஆதரவை வழங்குதல்

என்ற தொடர்ச்சியான அணுகுமுறையின் ஊடாக, சமூக மட்டத்தில் உளநலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

ஒருவரின் உளநலத் தேவையை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு, அவரை உரிய சேவையுடன் இணைத்து, தொடர்ந்து தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் உள ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்

“யாரும் தனிமையில் விடப்படக்கூடாது”
என்ற மனிதநேய அணுகுமுறையை சமூக மட்டத்தில் வலுப்படுத்துவதே உளசமூக ஆதரவு நிழல் அமைப்பின் நோக்கமாகும்.

அறிக்கைகள் கிடைப்பதற்கு முன்னரே மாணவியின் வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடிய நிலை – அவசரமாக பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரைய...
17/09/2026

அறிக்கைகள் கிடைப்பதற்கு முன்னரே மாணவியின் வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடிய நிலை – அவசரமாக பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட ஒரு பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், தமக்கு உளஆறுதல் தேவைப்படுவதாக எமது உளசமூக ஆதரவு அமைப்பை (PSSS) நாடியிருந்தார்.

மாணவியின் நலன், கல்வித் தொடர்ச்சி, திறன் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, குறித்த விடயம் ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் உள்ளிட்ட உரிய நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகத்தினால் அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனினும், அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்று, உரிய நிர்வாக நடவடிக்கைகள் நிறைவு பெறுவதற்கு முன்னரே, மாணவியின் கல்வி, திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்துடன் தொடர்புடைய வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

உரிய நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கும் காலப்பகுதியில் மாணவியின் தற்போதைய நிலை மேலும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், பின்னர் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்து, மாணவியின் தற்போதைய தேவைகளுக்கு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, நிர்வாக ரீதியான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை காத்திருக்காமல், 16.09.2026 அன்று குறித்த பாடசாலைக்கு நேரடியாகச் சென்று பாடசாலை அதிபரையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடும் நிலை எமக்கு ஏற்பட்டது.

இந்த அவசர கலந்துரையாடலின் நோக்கம் எந்தவொரு தரப்பையும் குற்றம் சாட்டுவது அல்ல. மாறாக, மாணவியின் தற்போதைய நிலையைப் புரிந்துகொண்டு, அவரது கல்வித் தொடர்ச்சி, திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்ற வாய்ப்புகள் தேவையற்ற வகையில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதாகும்.

இந்தச் சந்திப்பு உளசமூக ஆதரவு அமைப்பின் தலைவி திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

கலந்துரையாடலின் போது, மாணவியின் தனியுரிமை மற்றும் நலனைப் பாதுகாத்து, பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், மாணவிக்கு வழங்கக்கூடிய உளஆறுதல் மற்றும் ஆதரவு, கல்வி மற்றும் திறன் சார்ந்த தொடர்ச்சியான வாய்ப்புகள் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் எமது அமைப்பினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகத்தின் கவனத்திற்கும் விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து அவதானித்து வருகின்றோம்.

நிர்வாகத் தடைகள் இருந்தாலும் – ஆதரவு தேவைப்படுவோருக்கான சேவை தொடர்கிறது

ஆதரவு தேவைப்படும் பலர், தங்களுடைய பிரச்சினைகளை நிர்வாக ரீதியாகத் தொடர்ந்து முன்வைத்தும், தேவையான ஆதரவு அல்லது தீர்வு கிடைக்காத நிலையில் எமது உளசமூக ஆதரவு அமைப்பை நாடி வருகின்றனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்து வைப்பது மட்டுமே எமது நோக்கம் அல்ல. அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, உரிய நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தேவையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, உரிய ஆதரவு மற்றும் தீர்வுக்கான வழிகாட்டலைப் பெற்றுக்கொடுப்பதே எமது சேவையின் நோக்கமாகும்.

எமது களச் செயற்பாடுகளால் நேரடியாகத் தீர்வு காண முடியாத நிர்வாக ரீதியான பிரச்சினைகள், தேவைக்கேற்ப ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் போன்ற உரிய தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

ஆதரவு தேவைப்படும் நபர்கள் தங்களுடைய பிரச்சினைகளுடன் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, அவர்களுக்காக எமது அமைப்பும் பல்வேறு நிர்வாக மற்றும் நடைமுறைச் சவால்களை எதிர்கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.

இருப்பினும், இத்தகைய சவால்கள் எமது சேவையின் நோக்கத்தைத் தடுக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

நிர்வாக நடவடிக்கைகளுக்கு காலம் தேவைப்படலாம். ஆனால், அந்தக் காலதாமதத்தால் ஆதரவு தேவைப்படும் ஒருவரின் தற்போதைய தேவைகள் புறக்கணிக்கப்படக்கூடாது. குறிப்பாக, ஒரு மாணவியின் கல்வி, திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்துடன் தொடர்புடைய வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை காணப்படும் போது, கிடைக்கக்கூடிய ஆதரவு வழிகளை உரிய நேரத்தில் பயன்படுத்துவது அவசியமாகும்.

நிர்வாக ரீதியான அனைத்து பொருத்தமான வழிமுறைகளையும் பயன்படுத்திய பின்னரும் தேவையான தீர்வு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சட்டரீதியான உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாப்பதற்காக உரிய சட்ட ஆலோசனையைப் பெற்று, தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழிமுறைகளை நாடுவதற்கும் வழிகாட்டுதல் வழங்கப்படலாம்.

எமது நோக்கம் எந்தவொரு நிறுவனத்துடனும் முரண்படுவது அல்ல. ஆதரவு தேவைப்படும் நபர்களின் உரிமைகள், நலன் மற்றும் தேவைகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதற்கான சட்டபூர்வமான மற்றும் பொறுப்பான வழிகளில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதே எமது நோக்கமாகும்.

ஒரு பிரச்சினைக்கு நிர்வாகத் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பது மட்டும் போதாது. அந்தக் காலப்பகுதியிலும், ஆதரவு தேவைப்படும் நபரின் தற்போதைய தேவைகளைக் கவனத்தில் கொண்டு, உரிய தரப்புகளுடன் இணைந்து தேவையான ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதும் முக்கியமாகும்.

மாணவியின் தனிப்பட்ட தகவல்கள், அடையாளம் காணக்கூடிய விபரங்கள் மற்றும் அவருடைய தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய எந்தத் தகவலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பதிவில் வெளியிடப்படவில்லை.

Address

Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Psychosocial Support Volunteer Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category