ISR TRUST

Directions

ISR TRUST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISR TRUST, Real Estate, 9A1, south Street, Pothigaiyadai, Papanasam, Ambasamudram.

26/08/2026
தமிழ்நாடு நாள் கவிதை #ஒற்றுமையே_என்றும்_பலம்நாம் பிறந்த மண் தமிழ்நாடு,நம் உயிரின் பெருமை தமிழ்நாடு.மொழியால் உயர்ந்தது,மர...
18/07/2026

தமிழ்நாடு நாள் கவிதை

#ஒற்றுமையே_என்றும்_பலம்

நாம் பிறந்த மண் தமிழ்நாடு,
நம் உயிரின் பெருமை தமிழ்நாடு.
மொழியால் உயர்ந்தது,
மரபால் செழித்தது,
மனிதநேயத்தால் உலகம் போற்றும் தமிழ்நாடு.

சாதி, சமயம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி,
சமூக நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் நிலம் இது.
அன்பும், அமைதியும்,
ஒற்றுமையும், ஒருமைப்பாடும்
நம் வாழ்வின் அடையாளம்.

கலை, இலக்கியம், கல்வி, பண்பாடு
இவை அனைத்தும் நம் பெருமையின் தூண்கள்.
பல்வேறு மொழிகள் பேசினாலும்
ஒரே இதயத்துடன் வாழும்
தமிழ்நாட்டின் மக்கள் நம் வலிமை.

இந்தியாவின் பல மாநிலங்களில்
மாதிரியாகத் திகழும்
சமூக பாதுகாப்பும்,
சமத்துவ உணர்வும்,
மனிதநேயமும் கொண்ட மண்ணிது.

இந்த மண்ணின் நலனே நம் நோக்கம்.
இந்த மண்ணின் முன்னேற்றமே நம் பயணம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக
என்றும் பாடுபடுவேன்
நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

தமிழை நேசிப்போம்
தமிழர் பண்பாட்டைக் காப்போம்.
இயற்கையையும் மனிதநேயத்தையும் பேணுவோம்.
அன்பால் இணைவோம்
அறத்தால் உயர்வோம்.

ஒற்றுமையே நம் பலம்!
ஒருமைப்பாடே நம் அடையாளம்!
சமூக நல்லிணக்கமே நம் செல்வம்!
தமிழ்நாட்டின் நலனே நம் வாழ்வின் இலட்சியம்!

வாழ்க தமிழ்நாடு!
வளர்க தமிழர் ஒற்றுமை!
வெல்லட்டும் மனிதநேயம்!
என்றும் ஒற்றுமையே நம் பலம்!

இவன்
ஷாஜி ஸ்டீபன் DME(Marine).B.A.L.L.B.,
ISR TRUST நிறுவனர்

08/03/2026

சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை (ISR TRUST) சார்பாக
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ஓய்வறியாது உழைக்கும்
உலகின் ஒளிவிளக்குகளே…
தனக்காக அல்ல,
தன்னைச் சார்ந்தவர்களுக்காக
தன்னலமின்றி வாழும்
மகத்தான மகளிர்களே!

உங்கள் உழைப்பில்
ஒரு குடும்பம் மலர்கிறது,
உங்கள் தியாகத்தில்
ஒரு தலைமுறை உயர்கிறது.
எண்ணற்ற ஆசைகளை
உள்ளத்தில் புதைத்துக் கொண்டு
பிறரின் கனவுகளை
நனவாக்கும் அக்னிச் சிறகுகளே!

நீங்கள் சுமக்கும் பொறுப்பு
ஒரு இல்லத்தின் வலிமை,
நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி.
உங்கள் உழைப்பிற்கு
உரிய பிரதிநிதித்துவமும்,
உங்கள் அர்ப்பணிப்பிற்கு
உரிய அங்கீகாரமும்
இந்த உலகம் வழங்க வேண்டிய
அமோகமான மரியாதை.
வாழ்வில் எட்டாக்கனியாய் தோன்றும்
எல்லா கனவுகளையும்
உங்கள் உறுதியான சிறகுகள்
எட்டிப் பறிக்கட்டும்.

இந்த மகளிர் தினத்தில்
உங்கள் தியாகத்திற்கும்,
உங்கள் வலிமைக்கும்,
உங்கள் அர்ப்பணிப்பிற்கும்
எங்கள் மரியாதை நிறைந்த வணக்கங்கள்.

அக்னிச் சிறகுகள் போன்ற
அனைத்து மகளிருக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஷாஜி ஸ்டீபன் Founder
சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை
(International Social Reconciliation Trust – ISR Trust)

Address

9A1, South Street, Pothigaiyadai, Papanasam
Ambasamudram
627425

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISR TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category