e-Tamil24

e-Tamil24 This is a media page. Everyone finds Global and Local news on this page.

 #பெரியநீலாவணை_மற்றும்_கல்முனை01C_பிரிவுகளில் “ #ரண்விமன”  #வீடமைப்புத்_திட்டங்கள்_உத்தியோகபூர்வமாக_கையளிப்பு!கல்முனை,  ...
02/09/2026

#பெரியநீலாவணை_மற்றும்_கல்முனை01C_பிரிவுகளில் “ #ரண்விமன” #வீடமைப்புத்_திட்டங்கள்_உத்தியோகபூர்வமாக_கையளிப்பு!

கல்முனை, செப்டம்பர் 02.

சமுர்த்தி “ரண்விமன” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ் அவர்களினால் இன்று (02) பெரியநீலாவணை–01 மற்றும் கல்முனை–01C பிரிவுகளில் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ். ஸ்ரீநாதன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவியாளர்கள், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் சங்கத் தலைவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளின் குடும்ப நலனை கருத்திற்கொண்டு, இந்நிகழ்வின்போது தலா ரூ.10,000 பெறுமதியான உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி “ரண்விமன” வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக தேவையுடைய குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளை பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான சமூக நலத்திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
e-Tamil24 TM News Kalmunai Net

கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!கல...
02/09/2026

கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

கல்முனை வடக்கு, செப்டெம்பர் 01:

அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம், EQUIP / Maxwell Leadership அமைப்புடன் இணைந்து இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த “வெற்றிக்கு அப்பால் – Beyond Success Roundtable Initiative” எனும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (01.09.2026) நடைபெற்றது.

இளைஞர், யுவதிகளை சிறந்த தலைவர்களாக உருவாக்குதல், அவர்களின் Leadership Skills மற்றும் Mindset ஆகியவற்றை மேம்படுத்துதல், மற்றவர்களின் திறன்களையும் வளர்க்கக்கூடிய தலைவர்களை உருவாக்குதல் மற்றும் தனிப்பட்ட, சமூக மற்றும் நிறுவன ரீதியான வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் ஆகிய முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் மனப்பான்மை (Mindset), தனிப்பட்ட வளர்ச்சி (Personal Growth), முன்னுரிமை (Priority), உறவுகள் (Relationships), எனது அதிமுக்கிய உறவு (My Most Important Relationship), நல்ல நோக்கத்திலிருந்து நல்ல செயல்பாடுகள் (Good Intentions to Good Actions), வெற்றியிலிருந்து சிறப்புமிக்க ஒரு வாழ்வு (From Success to a Life of Significance) உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைமைத்துவ மற்றும் தனிமனித மேம்பாட்டு மொடியூல்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
பயிற்சியின் மூலம் இளைஞர், யுவதிகள் தங்களது தலைமைத்துவத் திறன்கள், சிந்தனை முறை, தனிப்பட்ட பொறுப்புணர்வு, உறவுகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் சமூகத்திற்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களைப் பெற்றனர்.

இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ், திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் வே.அரவிந்தன், வளவாளரான திருமதி. சோனியா தயாகரன் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தி, அவர்களை எதிர்காலத்தில் சமூகத்தையும் நிறுவனங்களையும் முன்னோக்கி வழிநடத்தக்கூடிய பொறுப்புமிக்க தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் முக்கியமானதொரு முன்னெடுப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








e-Tamil24 Kalmunai Net TM News

26/08/2026

இனிய மீலாது நபி வாழ்த்துக்கள் e-Tamil24 TM News Kalmunai Net

21/08/2026

உலக மூத்த குடிமக்கள் தினம்

21/08/2026
21/08/2026

#கல்முனை_வடக்கு_ஆதார_வைத்தியசாலை_ஆடை_சர்ச்சை_மனித_உரிமை_ஆணைக்குழுவில்!
e-Tamil24 Kalmunai Net TM News

20/08/2026

“SRI LANKA NEWS ROUNDUP | TODAY’S TOP STORIES 2026.08.19 TM News Kalmunai Net e-Tamil24

Address

#70, Main Street, Periyaneelavanai-01A
Kalmunai
32316

Website

Alerts

Be the first to know and let us send you an email when e-Tamil24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category